உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள்.
வீட்டில் பதுக்கிய ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்
- 140 கிலோ சிக்கியது
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அரசால் தடை செய்யபட்ட குட்கா பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யபட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.
மேலும் இது சம்மந்தமாக ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து அரசால் தடைசெய்யபட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என போலீசார் கடைகளில் சோதனை நடத்தினர்.
மேலும் ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்த மரகதம்மாள் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7லட்சம் மதிப்பிலான 16 மூட்டையில் 140 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மரக தம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.