உள்ளூர் செய்திகள்

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழையின் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து கீழே விழுந்துள்ளதைஒ.ஜோதி எம்.எல்.ஏ. பார்வையிட்ட போது எடுத்த படம்.

அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

Published On 2022-12-11 14:23 IST   |   Update On 2022-12-11 14:23:00 IST
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
  • 13 பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

செய்யாறு:

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட செய்யாறு வெம்பாக்கம் பகுதிகளை ஒ.ஜோதி எம் எல் ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார். செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பின்பகுதி சுற்றுச்சுவர் மழையின் காரணமாக முழுவதுமாக இடிந்து விழுந்தது உள்ளதை தகவல் அறிந்த ஒ.ஜோதி எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு சுற்றுச்சுவர்அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பின்னர் செய்யாறு, வெம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். வெம்பாக்கம் தாலுகா, இருமரம் கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட 13 பழங்குடியின மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், தினகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வழக்கறிஞர் கே விஸ்வநாதன் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News