உள்ளூர் செய்திகள்

கோவில்களை குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்

Published On 2022-10-21 15:37 IST   |   Update On 2022-10-21 15:37:00 IST
  • தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்களிடையே பீதி
  • செங்கம் போலீசார் விசாரணை

செங்கம்:

செங்கம் அருகே உள்ள அரட்டவாடி, பேயாலம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது.

செங்கம் அருகே உள்ள பேயாலம்பட்டு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், அரட்டவாடி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் காமாட்சி அம்மன் கோவில்களில் நேற்று முன்தினம் மர்ம கும்பலால் கோவில் உண்டியல் உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகை உள்ளிட்டவைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 2 லட்ச ரூபாய் மற்றும் 6 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து செங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்செங்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது இந்த திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News