உள்ளூர் செய்திகள்

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி இலவச வேட்டி, சேலை வழங்கிய காட்சி.

11,820 பேருக்கு இலவச வேட்டி சேலை

Published On 2022-10-25 15:22 IST   |   Update On 2022-10-25 15:22:00 IST
  • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூர்:

கீழ் பென்னாத்தூர் தாலுக்காவிற்குட்பட்ட 77 கிராமங்களில் வசிக்கும் தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை பெற்று வரும் 11,820 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இலவச வேட்டி சேலைகள் வழங்கும் விழா கீழ்பென்னாத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், நகர செயலாளர் சி.கே.அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.கே. பன்னீர்செல்வம், பேரூ ராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டாட்சியர் சக்கரை அனைவரையும் வரவேற்றார். தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சமூக பாதுகாப்புதிட்டத்தின் கீழ் உதவி தொகை பெற்று வரும் பயனாளிகள் 11,820 நபர்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில், தலைமை இடத்து துணை தாசில்தார் தனபால், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர் நந்தகோபால், கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர், பிரவீன் குமார், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பாக்கியராஜ், ஜீவாமனோகரன், கே.பி.மணி, அம்பிகாராமதாஸ், ஒன்றிய நிர்வாகிகள் சோமாஸ்பாடி சிவகுமார், கனபாபுரம் ஊராட்சி மன்றதலைவர் பரசுராமன், வேடநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, நகர திமுக நிர்வாகிகள் பழனி, இளங்கோ, அருள்மணி, பூக்கடை ராஜேஷ், சின்னா, வினோத், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் நன்றிகூறினார்.

Tags:    

Similar News