உள்ளூர் செய்திகள்

மானியத்துடன் ஆடுகள் வழங்கிய காட்சி.

செய்யாறில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 30 பெண் பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்

Published On 2022-06-24 10:17 GMT   |   Update On 2022-06-24 10:17 GMT
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
  • திருவத்திபுரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது

செய்யாறு :

தமிழக அரசு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு நூறு சதவீத மானியத்துடன் இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவத்திபுரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர்ஆ. மோகனவேல் தலைமை வகித்தார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். கால்நடை துறை உதவி இயக்குனர் ஜான் சாமுவேல் வரவேற்றார்.

எம்எல்ஏ ஒ.ஜோதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.5.25 லட்சம் மதிப்பில் 30 பெண் பயனாளிகளுக்கு தலா 5 இலவச ஆடுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் தங்கதுரை, வெங்கட்ராகவன், சுகன்யா, ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், நகரமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News