உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணையாற்றில் வெள்ளம்

Published On 2022-10-16 08:56 GMT   |   Update On 2022-10-16 08:56 GMT
  • சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
  • அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது

திருவண்ணாமலை:

தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 7,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடு வென உயர்ந்துள்ளது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டத்தில், பாதுகாப்பு கருதி117 அடி உயரம் வரை தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அணைக்கு வரும் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையின் நீர் மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 116.10 அடியாக உள்ளது. அணையில் 6,678 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3,900 கனஅடி தண்ணீர் வருகிறது.

அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 4,980 கனஅடி தண்ணீரும், கால்வாய்களில் விநாடிக்கு 450 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 5,430 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News