உள்ளூர் செய்திகள்

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மசூதிகளை சீரமைக்க ரூ.57 லட்சம் நிதியை நிர்வாகிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கிய பேசிய போது எடுத்த படம். அருகில் சரவணன் எம்.எல்.ஏ. உட்பட பலர் உள்ளனர்.

கலசப்பாக்கம் தொகுதியில் 8 மசூதிகளை சீரமைக்க ரூ.57 லட்சம் நிதி உதவி

Published On 2023-01-08 14:20 IST   |   Update On 2023-01-08 14:20:00 IST
  • அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
  • மசூதி நிர்வாகத்தின் கோரிக்கை அடிப்படையில் ஏற்பாடு

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம், எர்ணாமங்கலம், கடலாடி, கீழ்ப்பாலூர், வீரளூர், கேட்டவர்பாளையம், மோட்டூர், வன்னியனூர், காந்தபாளையம், தொப்பனந்தல் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு, காஞ்சி, ஆலத்தூர், இறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது.

இதனை எம்எல்ஏ சரவணனிடம் சரி செய்து கொடுக்கும்படி மசூதி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் சரவணன் எம்.எல்.ஏ. பேசினார்.

அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலசப்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பின்னர் அனைத்து மசுதிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டு அடிப்படை வசதிகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என தெரிவித்துச் சென்றார். இந்நிலையில் நேற்று மசூதிக்கு சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் கலசப்பாக்கம், கடலாடி, கீழ்பாலூர், எர்ணாமங்கலம், வீரலூர், காரப்பட்டு, காஞ்சி, இறையூர் ஆகிய 8 மசூதிகளுக்கு ரூ.57 லட்சம் நிதியை மசூதி நிர்வாகிகளிடம் சிறுபான்மை துறை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

மேலும் விடுபட்டுள்ள மசூதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் ஆய்வு மேற்கொண்டு மே மாதத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News