உள்ளூர் செய்திகள்

புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்த காட்சி.

கண்ணமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-07-16 15:33 IST   |   Update On 2022-07-16 15:33:00 IST
  • கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கை
  • ஓடை புறம்போக்கு

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான மேற்படி கிராம சர்வே எண்.62 ஓடை புறம்போக்கில் 0.82.0 பரப்பளவில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அளவீடு செய்யப்பட்டு போளூர் தாசில்தார் சண்முகம், மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார் கண்ணமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் குமார், குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதாமுரளி, சந்தவாசல் உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Tags:    

Similar News