திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள தர்காவில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் ஈடுபட்ட போது எடுத்த படம். அருகில் மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. உட்பட பலர் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டி தர்காவில் சிறப்பு தொழுகை
- திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்தது
- கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
முன்னாள் முதலமைச்சர், இடைக்கால பொதுச்செயலாளர், பிரதான எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக மக்கள் பணியாற்றிட வேண்டி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சா ர்பில், திருவண்ணாமலை, மணலூர்பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தர்காவில், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், மாவட்ட செயலாளர், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி. எம்எல்ஏ தலைமையில் அ.தி.மு.க. அவைத்தலைவர், தமிழ்மகன்உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தர்காவில் சிறப்பு தொழுகை செய்தனர்.பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.