உள்ளூர் செய்திகள்

துரியோதனன் படுகளம்

Published On 2023-05-19 07:49 GMT   |   Update On 2023-05-19 07:49 GMT
  • மாலையில் தீமிதி விழா நடைபெற்றது
  • ஏராளமானோர் சாமி தரிசனம்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்நகர் கிராமத்தில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் கடந்த மாதம் 30-ம்தேதி அலகு நிறுத்தி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

தொடர்ந்து தினமும் பிற்பகல் 2 மணி அளவில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 6ம்தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகங்கள் நடைபெற்று வந்தது.

பின்னர் கடந்த 17-ந் தேதி காலை கோயில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் வருகைதந்து தந்து அம்மனை தரிசனம் செய்தார்.கோயில் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராணிதண்டபாணி சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

நேற்று தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News