செங்கம் அருகே டாக்டர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
- மூதாட்டியை கட்டிப்போட்டு துணிகரம்
- போலீசார் விசாரணை
புதுப்பாளையம்:
செங்கம் பகுதியை சேர்ந்தவர் குலோத்துங்க சோழன் (வயது 55). டாக்டர். இவர் செங்கம் டவுன் பழைய பஸ் நிலையம் அருகே சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இவரது தாயார் ராஜேஸ்வரி அம்மாள் (75). செங்கம் அடுத்த கிளையூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ராஜேஸ்வரி அம்மாள் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து டாக்டரின் தாயாரை கட்டிப்போட்டு தனி அறையில் அடைத்து வைத்தனர்.
பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த நிலையில் அதிகாலையில் ராஜேஸ்வரி அம்மாள் வீட்டிற்கு வேலைக்கு வந்த பணியாளர்கள் வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மூடிக்கிடந்த ஒரு அறையை திறந்து பார்த்தபோது ராஜேஸ்வரி மர்ம கும்பல் கட்டிப்போட்டு விட்டு நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தத. இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் குலோ த்துங்க சோழன் செங்கம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.