மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தீமிதி திருவிழா
- அன்னதானம் வழங்கப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, பழம்பேட்டையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன், கோவிலில் 34-ம் ஆண்டு தீமிதி விழா மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது.பின்னர் பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.அதைத்தொடர்ந்து காப்புக்கட்டி, விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
முன்னதாக முத்துமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் சேத்துப்பட்டு, கண்ணனூர், பழம்பேட்டை, நெடுங்குணம், கெங்கைசூடாமணி, பெரணம்பாக்கம், வேப்பம்பட்டு, வில்லிவனம், நந்தியம்பாடி ஆகிய கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பா.சீனுவாசன், கோவில் பூசாரிகள் ரங்கராஜன், ஏழுமலை, ரங்கன் ஆகியோர் செய்து இருந்தனர்.