உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் மண்டபத்தில் தேவாரம் திருவாசகம் மாநாடு நடந்த காட்சி.

தேவாரம் திருவாசகம் 2 நாள் மாநாடு

Published On 2022-07-18 14:02 IST   |   Update On 2022-07-18 14:02:00 IST
  • சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது
  • சிவனடியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேவார திருவாசகம் மாநாடு 5-ம்ஆண்டாக தொடங்கியது.

இந்த மாநாட்டில் திருவாவடுதுறை ஆதினம் சைவ சித்தாந்த பயிற்சி மைய அமைப்பாளர் பழனிச்சாமி, "அழியா மரபு வழியே ஆகும்' என்ற தலைப்பிலும், குடவாசல் ஆதின புலவர் வி.ராமமூர்த்தி, திருவாவடுதுறை திருமுறை ஆசிரியர் அ.வேலுசாமி, வேத உள்ளுரையான் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். முன்னதாக காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ராமநாதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து வல்லம் கீழ்வல்லம் அச்சுதாசர் ஜீவமுக்தி ஆலயத்திலிருந்து பன்னிரு திருமுறைகள் ஊர்வலமாக மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு விளக்கேற்றும் பணி செய்து வரும் ப.ஜெயராமன் இடபக்கொடி ஏற்றி வைத்தார். கோ.பலராமன் கொடி கவி பாடினார்.

பிற்பகலில் ஈரோடு அம்பலத்தரசு, சோளிங்கர் மு.செல்வநாதன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் திருவாசகம் சிறப்புகள் குறித்து விளக்கினர். மாலையில் மழையூர் சதாசிவம் குழுவினர் சிறப்பு திருமுறை இன்னிசை பாடினர். காலை அண்டர் நாயகர் தொண்டர்கள் பெண் அடியார்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு திருமுறை விண்ணப்பம் செய்கின்றனர்.

மேலும் தேவாரம் திருவாசகம் குறித்து பல்வேறு சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News