உள்ளூர் செய்திகள்

இடி தாக்கி வீட்டின் மாடி சுவர் சேதம்

Published On 2022-11-12 13:18 IST   |   Update On 2022-11-12 13:18:00 IST
  • மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது
  • வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

வந்தவாசி:

தமிழகத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி உருவானதை தொடர்ந்து வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளான சென்னாவரம், நடுக்குப்பம்,தெள்ளார், வெண்குன்றம், மாம்பட்டு, மருதாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது வீட்டின் மாடியில் பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியது.

இதில் மாடியில் இருந்த சுவர் இடிந்து கீழே விழுந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருக்கும் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags:    

Similar News