புதிய நகர் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்த போது எடுத்த படம்.
வந்தவாசியில் ரூ.75 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணி
- அம்பேத்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்
- நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சி க்குட்பட்ட பகுதி புதிய பஸ் நிலையம் அருகே நகர ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு சொந்தமான கட்டிடம் இதுவரை இல்லாத நிலையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இதற்கு போதிய இட வசதி இல்லாததால் மருத்துவர்கள் நோயாளிகள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தேசிய நகர்ப்புற நல திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவாசி திமுக அம்பேத்குமார் எம்.எல்.ஏ., திமுக மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்து பல்வேறு பூஜைகள் செய்தனர். விழாவில் திமுக மாவட்ட அவை தலைவர் கே ஆர் சீதாபதி நகர மன்ற தலைவர் ஜலால் நகர மன்ற துணைத் தலைவர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர் ராதா நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் மருத்துவ அலுவலர் ஆனந்தன் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.