உள்ளூர் செய்திகள்

ஆரணியில் சப்-கலெக்டர் வாகனத்தை முற்றுகையிட்ட தேர்வர்கள்.

ஆரணியில் குரூப்-4 தேர்வுக்கு அனுமதி மறுத்ததால் சப்-கலெக்டரை முற்றுகையிட்ட தேர்வர்கள்

Published On 2022-07-24 14:44 IST   |   Update On 2022-07-24 14:44:00 IST
  • ஏமாற்றத்துடன் கண் கலங்கியவாறு திரும்பி சென்றனர்
  • 12 ஆயிரத்து 940 பேர் தேர்வு எழுதினர்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு 42 மையங்களில் நடந்தது. சுமார் 12ஆயிரத்து 940பேர் தேர்வு எழுதினர்.

ஆரணி டவுன் கோட்டை அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மையத்தில் தேர்வு எழுத மாணவர்கள் ஆர்வத்துடன் வருகைபுரிந்தனர்.

மேலும் காலை 9 மணிக்கு மேல் தேர்வு எழுத வரும் நபர்களை அனுமதி கிடையாது என்று கூறியதால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியடைந்ந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு தேர்வு மையத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் ஆனால் வருவாய் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

பின்னர் தகவலறிந்த வந்த சப்-கலெக்டர் தனலட்சுமியின் வாகனத்தை வழிமறித்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் காலதாமதம் ஏற்பட்டதால் அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் விழிபிதுங்கி நின்று என்ன செய்வது என்று தெரியாமல் கண்கலங்கியவாறு திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News