உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

டாஸ்மாக் கடையில் ரூ.1.15 லட்சம் மது பாட்டில்கள் கொள்ளை

Published On 2022-06-12 13:44 IST   |   Update On 2022-06-12 13:47:00 IST
  • பூட்டை உடைத்து கைவரிசை
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

கலசபாக்கம் அடுத்த சொரகொளத்தூர் டாஸ்மாக் மதுபானக் கடையில் அதே பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் சூப்பர்வைசராகவும் மேலும் 3 விற்பனையாளர்கள் கடையில் பணி புரிந்து வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மறுநாள் அதிகாலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக சிவராமகிருஷ்ணனுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து கடைக்கு நேரில் சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பார்த்து அதிர்ச்சி அடைந்த உள்ளே சென்று பார்த்தபோது சுமார்16 அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 580 குவாட்டர், 98 ஆப், 27 பீர் உட்பட ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 550 மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம கும்பல் திருடிச்சென்றுள்ளதாக கூறபடுகிறது.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசில் சிவராம கிருஷ்ணன் புகார் அளித்தார். இதன் பேரில் கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News