உள்ளூர் செய்திகள்

படவேடு மங்கலாபுரம் வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டெருமை.

விவசாய நிலங்களில் காட்டெருமைகள் தொல்லை

Published On 2022-07-09 15:59 IST   |   Update On 2022-07-09 15:59:00 IST
  • 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நாசம்
  • வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு மங்களாபுரம் கிராமம் படவேடு செண்பகத்தோப்பு அணைக்கு செல்லும் வழியில் உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு நேரத்தில் காட்டு எருமைகள் விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் அச்சமும் வேதனையுடன் உள்ளனர்.

எனவே சந்தவாசல் வனத்துறையினர் காட்டெருமைகள் வருவதை கண்காணிக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனை சரி செய்ய வேண்டிய வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். விவசாய நிலங்களில் காட்டெருமைகள் வராமல் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு படவேடு வேட்டகிரிபாளையம் பகுதியில் வாழைத் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை அப்பகுதி விவசாயி ஒருவரை தாக்கியது. அதில் அவர் பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News