உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கலசப்பாக்கத்தில் பைக்குகள் மோதி 2 பேர் பலி

Published On 2022-06-10 14:32 IST   |   Update On 2022-06-10 14:32:00 IST
  • கணவன்- மனைவி படுகாயம்.
  • போலீசார் விசாரணை.

கலசப்பாக்கம்:

கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்நாதன் வயது (42) என்பவர் தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு சொந்த வேலை காரணமாக சோழவரத்தில் இருந்து எர்ணாமங்கலம் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.

அப்போது அவரது மாமா சுப்பிரமணி (76) என்பவரையும் உடன் அழைத்து சென்றார். பூவாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது மனைவி பழனியம்மாளுடன் பைக்கில் வானம் பட்டு கிராமத்திலிருந்து பூவம் பட்டு செல்வதற்காக சோழபுரம் நோக்கி மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சோழவரம் கூட்ரோடு அருகே வந்தபோது 2 பைக்கும் நேருக்கு நேர் எதிர் பாராத விதமாக மோதியது.

இதில் அருள்நாதனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த சுப்பிரமணிக்கும் படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் எதிரே வந்து மோதிய ராஜ்குமார் அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றன.

இச்சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News