உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-10-09 14:49 IST   |   Update On 2022-10-09 14:49:00 IST
  • மஞ்சப்பை உபயோகிப்பது குறித்து அறிவுரை
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூரில் நகரை சுத்தமாக வைத்திருக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சாலையோரம் கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பை உபயோகிப்பது குறித்து வியாபாரிகளுக்கு அறிவறுத்தப்பட்டு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கும் பணியை பேரூ ராட்சி தலைவர் கோ.சரவணன் தொடங்கி வைத்தார்.

வீடுகள், கடைகளில் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே ஒட்டும் பணியும் நடந்தது. மேலும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு வீட் டைச் சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க தண்ணீரை தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் தனமல்லி, கவுன்சிலர்கள் பாக்கியராஜ், அம்பிகாராமதாஸ், பணியாளர் கள் முத்து, ராஜசேகரன், தமிழ்மணி உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News