உள்ளூர் செய்திகள்

வாங்கிய கடனை திருப்பி தராததால் தம்பதி மீது தாக்குதல்

Published On 2022-06-22 16:07 IST   |   Update On 2022-06-22 16:07:00 IST
  • வீடு புகுந்து மர்ம கும்பல் துணிகரம்
  • போலீசார் விசாரணை

ஆரணி:

ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். நெசவு தொழிலாளி. இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு தமிழரசு, அன்பரசு, என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கஜேந்திரன் கடந்த 2 ஆண்டுகளாக குடும்ப வறுமை காரணமாக ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் கஜேந்திரன் வீட்டுக்கு 4 பேர் கும்பல் வந்து கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளனர்.

தற்போது பணம் இல்லை என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் கஜேந்திரன் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கஜேந்திரன் மற்றும் சாமுண்டீஸ்வரி தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News