உள்ளூர் செய்திகள்
பட்டாசு கடைகளில் உதவி கலெக்டர் தனலட்சுமி ஆய்வு செய்த காட்சி.
பட்டாசு கடைகளில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு
- தீயணைப்பான் உபகரணங்கள் உள்ளதா என சோதனை
- அதிகாரிகள் உடன் சென்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்வது வழக்கமாகும். ஆரணி
டவுன் பகுதியில் இயங்கி வரும் 11 பட்டாசு கடைகளை ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இதில் முறையான ஆவணங்கள் உரிமம் புதுப்பிக்கபட்டுள்ளதா எனவும் விபத்து குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதா பக்கெட்டில் தண்ணீர் தீயணைப்பான் உபகரணங்கள் உள்ளதா என ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
இதில் வருவாய் ஆய்வாளர் வேலுமணி கிராம நிர்வாக அலுவலர் ஜெயசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.