உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-11 14:27 IST   |   Update On 2022-07-11 14:27:00 IST
  • 2022-23 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை
  • வாரத்தில் 7 நாட்களும் நடைபெறும்

திருவண்ணாமலை:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு திறந்த நிலைப்பல்க லைக்க ழகத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதர படிப்புகளுக்கான 2022-23 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் தொடர்பான விவரங்கள் பல்கலைக்க ழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி பயில விரும்பு பவர்கள் தங்கள் வசிப்பி டத்தின் அருகில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையங்கள் மற்றும் அரசு கலை கல்லூரிகள் ஆகியவற்றில் சேர்க்கைக்கான வசதியை பெறலாம்.

மாணவர்களின் நலன் கருதி சேர்க்கையானது வாரத்தின் 7 நாட்களிலும் நடைபெறும். பல்கலைக்கழகத்தின் திருவண்ணாமலை மண்டல மையமானது வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களின் ஒருங்கிணைந்த மண்டல மையமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இம்மண்டலமையத்தின் தொடர்புக்கு 04175-299119, 9345913374 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News