உள்ளூர் செய்திகள்

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அன்னதானம்

Published On 2022-12-26 15:35 IST   |   Update On 2022-12-26 15:35:00 IST
  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை:

வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த அக்டோபர் முதல் 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடத்தவும், வள்ளலார் 200 தொடர் அன்னதானம் திட்டம் செயல்படுத்தவும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதைத் தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் கிரிவலப்பாதையில் உள்ள கோவிலின் திருமண மண்டபத்தில் தொடர் அன்னதானம் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறினார்.

இந்த அன்னதானம் நிகழ்ச்சி 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News