உள்ளூர் செய்திகள்
ஆரணியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும்
- முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்
- கே.என்.நேரு பதில் அளித்தார்
ஆரணி, மார்ச்:
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
வளர்ந்து வரும் ஆரணி நகராட்சியில் மக்கள்தொகைக்கு ஏற்ப நெல், அரிசி வியாபாரிகள் மற்றும் பட்டு சேலை வியாபாரிகள் அதிகளவில் தங்களுடைய வாகனங்களில் செல்வதாலும் இந்த 2 பஸ் நிலையங்களையும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, பதில் அளித்து பேசுகையில், பஸ் நிலையங்கள் அமைப்பது மக்களின் வசதிக்காக அமைக்க ப்படுகிறது, மக்கள் சென்று வர இலகுவாக இருக்கும்.
அதுவும் நகராட்சிக்கு வருவாய் ஏற்படும் வகையில் இருக்க வேண்டும். பஸ் நிலையம் அமைப்பதற்கு இடம் இருந்தால் கண்டிப்பாக அமைத்து தரப்படும் என்று பதிளித்தார்.