உள்ளூர் செய்திகள்

தேரேட்டம் நடந்த காட்சி.

ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோவிலில் தேரோட்டம்

Published On 2023-04-04 14:07 IST   |   Update On 2023-04-04 14:07:00 IST
  • 15 ஆண்டுக்கு பிறகு நடந்தது
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தேர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக பழுதடைந்து முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் அறநிலையத்துறை சார்பில் 63 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மற்றும் பொது மக்களின் பங்களிப்போடு தேர் செய்யும் பணி நடைபெற்று முடிவடைந்தது.

இந்த நிலையில் ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் 7ஆம் நாளான இன்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக ரங்கநாதர் பெருமாளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் பெருமாள் தேரில் அமர்த்தப்பட்டு தேர் திருவிழா தொடங்கியது.

வந்தவாசி தேரடி பகுதியில் இருந்து தொடங்கப்பட்டு காந்தி சாலை அச்சரப்பாக்கம் சாலை கே.ஆர்.கே தெரு சன்னதி தெரு வழியாக தேர் பவனி சென்றது.

வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News