உள்ளூர் செய்திகள்

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடிவெள்ளி விழா நடந்த காட்சி.

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடிவெள்ளி விழா

Published On 2022-07-23 14:49 IST   |   Update On 2022-07-23 14:49:00 IST
  • பரணி கிருத்திகை என்பதால் கூட்டம் குறைந்தது
  • இரவில் சாமி வீதிஉலா

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று முதல் ஆடி வெள்ளி விழா தொடங்கியது.

ஆனால் நேற்று பரணி காவடிகள் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து சென்றதால் கூட்டம் குறைந்து காணப்பட்டது என உள்ளூர் பக்தர் ஒருவர் தெரிவித்தார்.

இரவில்அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது அப்போது கரகாட்டம் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ரேணூகாம்பாள் கோவில் அருகே மலைமீது உள்ள முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது. இரவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி உலா நடக்கிறது.

Tags:    

Similar News