உள்ளூர் செய்திகள்
ேபாலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட காட்சி.
ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
சீட்டு பணம் எடுத்து துணிகரம்
ஆரணி:
ஆரணிஅருகே மொரப்பந்தாங்கள், ஒண்டி குடிசை கிருஷ்ணாவரம், மாமண்டூர், 12 புதூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
இவர்களிடம் 45 வயதுடைய நபர் ஒருவர் சீட்டு பணம் கட்டி அதனை பாதியிலேயே எடுத்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்து அந்த நபர் தலைமறைவாகி உள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பணத்தை மோசடி செய்து தலைமறை வாகிவிட்ட அந்த நபர் மீது தனித்தனியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு புகாரை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.