உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி மனைவியுடன் தரையில் அமர்ந்து வாலிபர் தர்ணா

Published On 2022-11-01 13:56 IST   |   Update On 2022-11-01 13:57:00 IST
  • 16 முறை மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரம்
  • போலீசார் சமாதானம்

திருவண்ணாமலை:

தண்டராம்பட்டு தாலுகா எடத்தனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவி இந்து மற்றும் மகன், தந்தை, தாய், பாட்டி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர்களை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில்:-

நாங்கள் வசித்து வரும் வீட்டின் பட்டா உறவினர் பெயரில் பதிவாகி உள்ளது. அவர் பட்டாவை வேறு ஒருவர் பெயரில் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறார். தவறாக பதிவாகியுள்ள பட்டாவை ரத்து செய்து எங்கள் வீட்டை அவரிடம் இருந்து மீட்டு தரக்கோரி இதுவரை 16 முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.

இதையடுத்து அவர்களை போலீசார் கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்து சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News