உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக கட்டப்பட்டு வரும் திட்டப் பணிகளை கூடுதல் கலெக்டர் வீர பிரதாப் சிங், நேரில் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

கைவிடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றும் திட்டம்

Published On 2023-02-01 10:10 GMT   |   Update On 2023-02-01 10:10 GMT
  • கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு
  • பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் தச்சம்பாடி, ஓதலவாடி, மன்சூராபாத், ஆகிய கிராமங்களில் கூடுதல் கலெக்டர் வீர பிரதாப் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணிகள், அண்ணா கிராமமறுமலர்ச்சி திட்டத்தில் சிமெண்ட் சாலை, அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தனிநபர் வீடு, உறிஞ்சு குழாய், பள்ளி சுற்றுச்சூவர், மாட்டு கொட்டகை, அமைக்கும் பணி, முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கின்னஸ் சாதனை படைக்க கைவிடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் மேல் நிரப்பு கட்டமைப்பு கட்டப்படும் பணிகளை கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், நேரில்ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது பயிற்சி கலெக்டர் ரஷ்மிராணி, உதவி செயற்பொறியாளர் கோவிந்தன், ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், இந்திராணி, ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உட்பட உடன் இருந்தனர்.

Tags:    

Similar News