உள்ளூர் செய்திகள்

ஆரணியில் மயான பாதையை சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மயான பாதை

Published On 2022-07-05 13:43 IST   |   Update On 2022-07-05 13:43:00 IST
  • சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு
  • சந்தைமேட்டில் காரிய மேடை அமைக்க வலியுறுத்தல்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் நேற்று முன்தினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது கடந்த ஆண்டு கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள மயான பாதை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

ஆனால் இதுவரை சீரமைக்காததால், இவ்வழியே பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாத நிலையில், உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து மயான பாதையை நேரில் சென்று சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு, கலெக்டர் மூலம் உரிய பாதை அமைத்து தரப்படும் என கூறினார்.

மேலும் சந்தைமேட்டில் காரிய மேடை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னர் ரெட்டிபாளையம் தம்டகோடி மலையில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News