உள்ளூர் செய்திகள்

60 அடி உயர புஷ்பபல்லக்கு பவனி

Published On 2023-03-31 15:14 IST   |   Update On 2023-03-31 15:14:00 IST
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
  • ஆரணி அமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி கோவிலில் நடந்தது

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இங்கு உயர்தேர் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடபட்டது.

முன்னதாக கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

விழாவின் 5ம் நாளான நேற்று நள்ளிரவில் அமிர்தாம்பிகை சந்திர சேகர் உற்வச சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சுமார் 60அடி உயரமும் 30அடி அகலம் கொண்ட பெருந்தேரில் சாமி ஊர்வலம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை ஊர் பொதுமக்கள் செய்தனர்.

Tags:    

Similar News