பிடிக்கப்பட்ட நாய்களை படத்தில் காணலாம்.
செய்யாறு பகுதியில் ரோட்டில் அச்சுறுத்திய 45 நாய்கள் பிடிப்பு
- நகரின் வெளிப்புற காட்டு பகுதியில் விட்டனர்
- பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் நாய்கள் அதிகரித்து காணப்பட்டன.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நாள்தோறும் அச்சத்தில் சென்று வந்தனர். நாய்களின் அச்சுறுத்தல் குறித்து நகர மன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதேபோல் தற்போது ஒவ்வொரு வார்டாக நடைபெற்று வரும் பகுதி சபா கூட்டங்களிலும் பொதுமக்கள் நாய்கள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் ஆலோசனையின்படி நேற்று நகராட்சி எல்லைக் குட்பட்ட வார்டு 1 மற்றும் 2ல் ஆற்காடு சாலை, ஆரணி சாலை, அனுமந் தன்பேட்டை, பஸ் நிலையம் பகுதிகளில் துப்புரவு அலுவலர் வை.சீனிவாசன், துப்புரவு ஆய்வாளர் கு.மதனராசன் ஆகியோர் மேற்பார்வையில் சுற்றித்தி ரிந்த 45 நாய்களை நகராட்சி பணியாளர்கள் பிடித்து நகரின் வெளிப்புறம் உள்ள காட்டில் விட்டனர்.
இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.