உள்ளூர் செய்திகள்
பஸ் அதிபர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
- கதவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வி.ஏ.கே. நகரை சேர்ந்தவர் செல்லப்பன். தனியார் பஸ் உரிமையாளர். குடும்ப சூழ்நிலை காரணமாக, சொந்த வீட்டில் இருந்து வெளியேறி, அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கின்றார்.
அதேநேரத்தில், சொந்த வீட்டில் தினசரி மின் விளக்கு எரியவிட்டுவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு வந்துவிடுவது வழக்கம்.
இதேபோல், மின்விளக்கை எரியவிட்டு வந்தவர், காலை மீண்டும் சென்றுள்ளார். அப்போது வீட்டுகதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது.
விசாரணை
மேலும் பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. அதிலிருந்த சுமார் 20 பவுன் நகையை காணவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.