உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்
- தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு தாலுகா பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவிகள் 2 பேர் அரையாண்டு பொதுத் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றனர்.
அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் செய்யாறு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.