- இருவேறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் நடவடிக்கை
- நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்
செய்யாறு:
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை வெங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவர் கடந்த 2005-ம் ஆண்டு பஸ்சில் சென்றபோது தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் இறந்தார். அவரது குடும்பத் துக்கு கோர்ட்டு உத்தரவிட்டபடி நஷ்டஈடு வழங்காததால் செய்யாறு கோர்ட்டில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப் பட்டது.
அதனை விசாரித்த கோர்ட்டு, பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில்செய்யாறு பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதேபோல் பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல், பொன்னன் ஆகிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு பஸ் மோதி காயம் அடைந்தனர்.
இவர்களுக்கும் கோர்ட்டு உத்தரவின்பேரில் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனையடுத்து நிறைவேறுதல் மனுதாக்கல் செய்யப்பட்டதை விசாரித்த செய்யாறு கோர்ட்டு பஸ்ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதன்பேரில் செய்யாறு பஸ் நிலையத்தில் நின்றுக் கொண்டு இருந்த டவுன் பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.