உள்ளூர் செய்திகள்
100 நாள் திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு சாலை மறியல்
- அதிகாரிகள் சமரசம்
- ஊராட்சி தலைவர் ேபச்சுவார்த்தையையடுத்து கலைந்து சென்றனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் வார்டு உறுப்பினர் வெண்ணிலா செல்வம் உள்பட சுமார் 40 பெண்கள் படவேடு செல்லும் சாலையில் மந்தைவெளி பகுதியில் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்தனர்.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாள், ஊராட்சி செயலாளர் பழனி ஆகியோரிடம் பேசி வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து பணி வழங்க ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.