உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குறைந்த விலைக்கு வாங்கி ரேசன் அரிசியை பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை - திருப்பூரில் வாலிபர் கைது

Published On 2023-03-09 08:08 GMT   |   Update On 2023-03-09 08:08 GMT
  • பரமசிவம்பாளை யத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினா்.
  • 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனா்.

திருப்பூர் :

திருப்பூா் அருகே ரேஷன் அரிசி பதுக்கியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இவரிடமிருந்து 350 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், கருக்காங்காடு அருகே உள்ள பரமசிவம்பாளையத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கிவைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து பரமசிவம்பாளை யத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினா். அங்கு பதுக்கி வைத்திருந்த 350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புள்ளாரெட்டிகாரி பள்ளியைச் சோ்ந்த கே.ஆசம்கதரிரெட்டி (37) என்பவரைக் கைது செய்தனா்."

Tags:    

Similar News