உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நான்முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

Published On 2023-07-02 09:53 IST   |   Update On 2023-07-02 09:53:00 IST
  • “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

திருப்பூர்:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான்முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச அளவிலான மற்றும் இந்திய அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க https://naanmudhalvan.tn.gov.in/tnskills/  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கடைசி நாள் ஆகும்.விண்ணப்பதாரர்கள் கடந்த 2002 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில குழுவாக பங்குபெறும் சில தொழில் பிரிவுகளுக்கு கடந்த 1999 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள் தொழில் பழகுநர்கள் பயிற்சி முடித்தவர்கள் தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.

இப்போட்டிக்கு இதுவரை சுமார் 1000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். திறன் ேபாட்டிக்கு பதிவு செய்திட ஜூலை 7-ந் தேதி கடைசி என்பதால் மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநிலஅளவிலான திறன் போட்டிக்கும் மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அளவிலும்,இந்திய அளவில் வென்றவர்கள் சர்வதேச அளவிலான திறன் போட்டிக்கும் பங்கு பெறலாம்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0421-2250500, 94990 55695,94434 71184. https://naanmudhalvan.tn.gov.in/tnskills/என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது கீ QR Code- மூலமாகவோ பதிவுகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News