உள்ளூர் செய்திகள்

கிளைச்சிறை வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர்.

உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா

Published On 2023-06-06 09:47 IST   |   Update On 2023-06-06 10:29:00 IST
  • சுற்றுச்சூழல் தின விழா உடுமலை கிளைச்சிறையில் கொண்டாடப்பட்டது.
  • கிளைச்சிறை வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர்.

உடுமலை :

உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா உடுமலை கிளைச்சிறையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், உடுமலை ஜே.எம். எண்.1 மாஜிஸ்திரேட்டு கே. விஜயகுமார், ஜே.எம். எண்.2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து கிளைச்சிறை வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர். இதையடுத்து உலக சுற்றுச்சூழல் தின விழா விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இதில் உடுமலை வக்கீல் சங்க தலைவர் மனோகரன், வக்கீல்கள் தம்பி பிரபாகரன், சத்தியவாணி உடுமலை கிளைச்சிறை காவல் கண்காணிப்பாளர் டி.கே.ஆர்.சபாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News