உள்ளூர் செய்திகள்

கபடி வீராங்கனைகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த காட்சி. கபடியில் பங்கேற்ற பெண்கள்.

பெண்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-30 08:40 GMT   |   Update On 2022-07-30 08:40 GMT
  • திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
  • மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில், மாவட்ட பெண்கள் கபடி சாம்பியன்ஷிப்போட்டி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் இன்று நடந்தது.

விழாவில் திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் நாச்சிமுத்து, தலைவர் முருகேசன், பொருளாளர் ஆறுச்சாமி, துணை சேர்மன் முருகானந்தம், துணை தலைவர்கள் ராம்தாஸ், செந்தூர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விவேகானந்தம் மைதானத்தை திறந்து வைத்தார். செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் வரவேற்று பேசினார். தலைமை புரவலர் சக்தி பிலிம்ஸ் சுப்ரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கபடி கழக கொடியை துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஏற்றி வைத்தார்.

பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

Tags:    

Similar News