உள்ளூர் செய்திகள்

  மனு அளிக்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் மில்லை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்

Published On 2022-11-28 06:39 GMT   |   Update On 2022-11-28 06:39 GMT
  • மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது.
  • மாசு ஏற்படுத்தும் இந்த நிறுவனத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் .

 திருப்பூர் : 

திருப்பூர் அடுத்த பல்லடம் இச்சிப்பட்டி சிங்கப்பூர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது.மில்லில் பஞ்சுகளை அரவை இயந்திரம் மூலம் அரைத்து வருகின்றனர். அதிலிருந்து வெளிவரும் கழிவுப்பஞ்சுகள் கம்பரசர் ஏர் மூலம் அடித்து வருகின்றனர்.

இதனால் நகர் முழுவதும் காற்றின் மூலமாக கழிவு பஞ்சு படர்கிறது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் காற்றில் பரவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவரும் மூச்சு திணறல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மாசு ஏற்படுத்தும் இந்த நிறுவனத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News