உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறையில் புதிய குளிர்சாதன பெட்டி அமைக்கப்படுமா?

Published On 2023-05-07 09:16 GMT   |   Update On 2023-05-07 09:16 GMT
  • குளிர்சாதன பெட்டி கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து வந்தது
  • இந்த குளிர்சாதன பெட்டி இனி பயன்படுத்த முடியாது

பல்லடம் : 

பல்லடத்தில்கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. தினமும் சுமார் ஆயிரத்தி ற்கும் மேற்ப ட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், விபத்து, மற்றும் தற்கொலை போன்ற வற்றால் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோ தனை செய்வதற்காக இருப்பு வைக்க குளிர் சாதன பெட்டி வசதி உள்ளது. இதற்கிடையே சுமார் 18 வருடங்களுக்கு மேல் பழமையான அந்தக் குளிர்சாதன பெட்டி கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து வந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு குளிர்சாதனப் பெட்டியை பழுது பார்க்க வந்த பொறியாளர் குழு, இந்த குளிர்சாதன பெட்டி இனி பயன்படுத்த முடியாது புதிய குளிர்சாதன பெட்டி வாங்கி பயன்ப டுத்துங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளனர். குளிர்சாதனப் பெட்டி பழுதானதால், இறந்து போன வர்களின் உடல்க ளை பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்க முடியாத நிலை உருவானது.இதனால் அந்த உடல்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அந்த உட ல்கள் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு பெரும் அலைச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமன்றி சுல்தான்பேட்டை, பொங்கலூர், மங்கலம் போன்ற பகுதிகளில் இருந்தும் விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக பல்லடம்அரசு மருத்துவ மனைக்குதான் கொண்டு வருகின்றனர். ஆனால் பல்லடம் அரசு மருத்துவ மனையில் ரத்த வங்கி, ஸ்கேன் போன்ற போதிய வசதிகள் இல்லை. இந்த வசதிகளை செய்து தர வேண்டிய 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தவும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ள நிலையில், தற்போது பிரேத பரிசோதனைக் கூட குளிர்சாதன பெட்டி பழுதடைந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் இறந்தவர்கள் உடலை வைக்க முடியாமல்,திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இதனால் கிராமங்களில் இருந்து வரும் உறவினர்கள் உடலுடன் திருப்பூருக்கு செல்ல வேண்டி இருப்பதால் காலவிரயம் ,பணம், மற்றும் அலைச்சல் ஏற்படுகிறது. பிரேத பரிசோதனை செய்ய கால தாமதமும் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் குளிர்சாதன பெட்டி புதிதாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் வீண் அலைச்சலை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News