உள்ளூர் செய்திகள்

அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய காட்சி.

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்

Published On 2023-10-22 09:51 GMT   |   Update On 2023-10-22 09:51 GMT
  • கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது.
  • அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.

தாராபுரம்

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொன்னாபுரம் வட்டார மருத்துவர் தேன்மொழி வரவேற்றார்.

அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகம், மற்றும் மக்களை தேடி மருத்துவத்தில் 10-பேருக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

மேலும் முகாமில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதில் அங்கன்வாடி மையம் சார்பில் காய்கறிகள் கண்காட்சி மற்றும் ஊட்டச்சத்து மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பார்த்தார். தளவாய் பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் முகாமில் 300 பெண்கள் உள்பட 750 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

முடிவில் சுகாதார ஆய்வாளர் நவீன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News