உள்ளூர் செய்திகள்

உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனு வழங்கிய காட்சி.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் குறித்து பிரதமரிடம் உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

Published On 2022-08-04 05:04 GMT   |   Update On 2022-08-04 05:04 GMT
  • விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
  • நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன.

பல்லடம் : 

பல்லடம், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தகவல். இதுகுறித்து பல்லடத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் விவசாயிகளின்,தேங்காய் தக்காளி சின்ன வெங்காயம் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு, உரிய விலை கிடைக்காததால் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகின்றன. ஆனைமலை - நல்லாறு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமரிடம் வழங்கப்பட்டது. கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் கூறினார்.

இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பா.ஜ.க.தலைவர் அண்ணாமலைக்கு நன்றி இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News