உள்ளூர் செய்திகள்

உடுமலை ரெயில் நிலையம்.

உடுமலை ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் - சண்முகசுந்தரம் எம்.பி., வலியுறுத்தல்

Published On 2023-07-15 10:43 GMT   |   Update On 2023-07-15 10:43 GMT
  • பிளாட்பாரத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழையில் நனைந்தும் வெயிலில் நின்றும் அவதிப்பட்டு வருகின்றனர்.
  • 4 நிமிடம் ெரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை:

பொள்ளாச்சி தொகுதி திமுக எம்பி., சண்முகசுந்தரம் டெல்லி ரயில்வே வாரிய தலைவர் ஒய்.கே. யாதவ்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள உடுமலை ெரயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அங்கு வசதிகள் குறைவாக உள்ளன. முதலாவது பிளாட்பாரத்தின் கிழக்குப் பகுதியில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழையில் நனைந்தும் வெயிலில் நின்றும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே முழுவதுமாக மேற்கூரை அமைக்க வேண்டும். பயணிகள் ஓய்வு எடுக்க காத்திருக்கும் அறை கட்ட வேண்டும். சரக்கு போக்குவரத்தை கையாளும் வசதி ஏற்படுத்த வேண்டும். இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். பாலக்காடு -திருச்செந்தூர் ெரயில் உடுமலையில் இரண்டு நிமிடம் மட்டுமே நின்று செல்கிறது. பயணிகள் கூட்டம் காரணமாக ஏற சிரமப்படுகின்றனர். எனவே 4 நிமிடம் ெரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே வலியுறுத்திய கோவை- மதுரை ெரயில் நிரந்தரம் செய்தல், கோவையில் இருந்து மதுரைக்கு காலை 6 மணிக்கு புறப்படும் வகையில் ெரயில் இயக்குதல், கோவை -கொல்லம் ,கோவை- ராமேஸ்வரம் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை ,பழனி ,திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு இரவு நேரம் ெரயில் இயக்க வேண்டும். உடுமலையில் ெரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். 

Tags:    

Similar News