உள்ளூர் செய்திகள்

வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை படத்தில் காணலாம்.

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் உடுமலையில் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-08-19 08:31 GMT   |   Update On 2022-08-19 08:31 GMT
  • வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.
  • வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது.

உடுமலை :

உடுமலை நகரில் ராஜேந்திரா ரோடு, கல்பனா வீதி, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட வழித்தடங்கள் பிரதான பகுதியாக உள்ளன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.தினமும் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது. பெரும்பாலான வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு, தங்கள் பணிகளுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த ரோடுகளில் தினமும் இடநெருக்கடி நீடிப்பதால், வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.

முறையற்ற போக்குவரத்து, வாகன நிறுத்தம் இல்லாமை போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கின்றனர். மத்திய பஸ் நிலையம் ஒட்டிய ரோடுகளில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சிறு விபத்துக்களும் அதிகரிக்கின்றன. பிரதான பகுதிகளில், வாகன நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய கடைகள், நிறுவனங்கள், உணவகங்களில் வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்தாவிடில், உரிமத்தை புதுப்பிக்க அனுமதிக்கக்கூடாது. விதிகளை மீறும் தனி நபர், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது, போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்தால் மட்டுமே விதிமீறலை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News