உள்ளூர் செய்திகள்

திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் சாதனை

Published On 2022-12-10 12:37 IST   |   Update On 2022-12-10 12:37:00 IST
  • அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனா்.
  • பருவத் தோ்வுகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

திருப்பூர் : 

கோவை பாரதியாா் பல்கலைக் கழகம் சாா்பில் நடைபெற்ற 2022 பருவத் தோ்வுகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனா்.

இது குறித்து கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் கூறியதாவது:- இளங்கலை சா்வதேச வணிகவியல் துறையில் பிரபாகரன் என்ற மாணவன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், இதே துறையில் பிரவீன்குமாா் என்ற மாணவன் 6 -வது இடத்தையும், வரலாற்றுத் துறை மாணவி பாண்டிச்செல்வி 3 -வது இடத்தையும், அகில் பிரசாத் 4 -வது இடத்தையும், கோபிநாத் 6 -வது இடத்தையும், அருள்குமாா் 10 -ம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

முதுநிலை பட்ட வகுப்புகளில் ஆடை வடிவமைப்பு ,நாகரிகம் துறையில் மாணவி வாணி ஸ்ரீ முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும், வேதியியல் துறையில் மாணவி திவ்யா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும் பெற்றனா்.

மேலும் நாக காா்த்திகா 4 ம் இடமும், ஹரிஹரன் 5 ம் இடமும், வானிலன் 6 ம் இடமும், சிவசக்தி 7 ம் இடமும், கவிப்பிரியா 8 ம் இடமும் பிடித்துள்ளனா்.

ஆங்கில இலக்கியத் துறையில் மோனிஷா 6-ம் இடமும், விலங்கியல் துறையில் பத்மஸ்ரீ 6 ம் இடமும் பிடித்துள்ளனா் என்றாா்.சிறப்பிடம் பிடித்த மாணவா்களை துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

Tags:    

Similar News