உள்ளூர் செய்திகள்

பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 

திருப்பூர் ரெயில் நிலையத்தில் தியாகி குமரன் பெயர் பலகை அகற்றம்

Published On 2022-07-28 10:47 GMT   |   Update On 2022-07-28 10:47 GMT
  • 75 வது சுதந்திர விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தியாகிகளை கவுரவிக்க, மத்திய அரசு திட்டமிட்டது.
  • தற்காலிகமாக தியாகி திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர் :

நாட்டின் 75 வது சுதந்திர விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தியாகிகளை கவுரவிக்க, மத்திய அரசு திட்டமிட்டது.நாடு முழுதும் 75 ெரயில் நிலையங்களை தேர்ந்தெடுத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்காக 18 முதல், 23-ந் தேதி வரை ஒரு வாரம் நிகழ்ச்சிநடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பட்டியலில் சேலம் கோட்டத்தில் திருப்பூர் ரெயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, திருப்பூர் குமரன் உள்ளிட்ட தியாகிகளை கவுரவப்படுத்த நாடகம், தேசபக்தி பாடல்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி நடந்தது. குமரன் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.நிகழ்ச்சி தொடங்கிய நாளில் திருப்பூர் ரெயில் நிலையம் முகப்பில், சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனை கவுரப்படுத்தும் வகையில் தியாகி திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.தற்போது அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு விட்டது.

இது குறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் குமரன் குறித்த நிகழ்ச்சி நடக்கும் போது விழிப்புணர்வுக்காக தற்காலிகமாக தியாகி திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது. மைக்கிலும் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி நிறைவு பெற்று விட்டதால், விளம்பர பலகையை அகற்றி விட்டோம் என்றனர்.

Tags:    

Similar News