உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பேசிய போது எடுத்த படம். அருகில் மாநகராட்சி எதிர் கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

பூத் கமிட்டியில் அதிக அளவில் இளைஞர்கள் இடம் பெற வேண்டும் - முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் பேச்சு

Published On 2023-03-20 05:39 GMT   |   Update On 2023-03-20 05:39 GMT
  • அதிமுக 42-வது வார்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • அதிமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் ஆலோசனைகள் வழங்கினார்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக 42-வது வார்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கே.வி.ஆர். நகரில் தென்னம்பாளையம் பகுதி செயலாளரும்,மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் வருகின்ற காலங்களில் புதிய வாக்காளர்கள் அதிமுகவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.அதற்கு கட்சிக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கடுமையாக பணியாற்ற வேண்டும். தலைமை கழகம் அறிவித்துள்ளபடி பூத் கமிட்டியில் அதிக அளவில் இளைஞர்கள் இடம் பெற வேண்டும்.அதேபோல் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் அணி நிர்வாகிகள் என ஒரு கலவையான பூத் கமிட்டியை அமைக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் 42-வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News